யோகா – உச்சி முதல் பாதம் வரை!

இப்பதிவில், யோகாவின் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.

உடல் நலம் கெட்டு துன்புறும் போதுதான் உடல்நலத்தின் மதிப்பை தெரிந்து கொள்கின்றோம். நம்முடைய சுகக்கேட்டிற்கு நாமே காரணமாக இருந்தாலும் நாம் தைரியத்தை இழக்க வேண்டாம். மறுபடியும் நல்ல உடல் நலத்தை உச்சி முதல் பாதம் வரை நிச்சயமாக யோகாசனத்தினால் பெறமுடியும்.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • யோகா
  • நோய்களுக்கு மருந்தாகும் யோகா
  • யோகாவின் ஆற்றல்
  • உச்சி முதல் பாதம் வரை பலன்

யோகா

Yogasanas tips benefits in tamil language

யோகாசனம் உடல் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, மனம் சம்பந்தப்பட்டதும் கூட! மனிதன் இயற்கை சுவாபத்தில் சாதாரணமாக தவறுகள் ஏற்படுவது கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால்தான். ஐம்புலன்களை அடக்கி அறிவு கொண்டு வாழ்ந்தால் பெரும் நன்மையை அடைவோம். அறிவை பறிகொடுத்து ஐம்புலன்களுக்கு அடிமையாகிவிட்டால் அவைகளே நம் ஆரோக்கியத்திற்கு முதல் எதிரிகளாக மாறுகின்றன.

நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வதோடு நம் உடலிற்கும் நன்மை செய்ய அறிந்துகொள்ள வேண்டும். உண்ணும் உணவு, பருகும் பானங்கள், ஓய்வு எடுத்தல் ஆகியவற்றை சீர் படுத்த வேண்டும். எண்ணங்களை சீர் படுத்தி மனதை அடக்கியாள கற்றுக்கொள்ள வேண்டும். இவைகள்தான் மனிதன் இன்பமான ஆரோக்கிய வாழ்வை பெரும் இயற்கை வழிகள். இவற்றை பெற யோகாசனம் ஒரு சிறந்த வழியாக அமைகிறது.

நோய்களுக்கு மருந்தாகும் யோகா

நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்கிறோமாயினும் இயற்கையோடு இணைந்து வாழ மறுப்பதோடு இயற்கையை அவமதிக்கவும் செய்கின்றோம். மருந்துகளும், டானிக்குகளும், ஊசி மருந்துகளும் தங்களுடைய வியாதியை குணப்படுத்தும் என்று மக்கள் நம்புகிறார்கள். இது ஓர் ஆபத்தான அபிப்ராயம். மருந்துகள் சாப்பிடுவதாலே பலர் துன்புற்று வருகிறார்கள்.

அலோபதி, ஆயுர்வேதம், யூனானி, ஹோமியோபதி போன்ற வைத்திய முறைகளினால் நோயை தற்காலிகமாக குணப்படுத்த முடியுமே தவிர நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் நோய்கள் வராமல் நல்லுடல் பெற்று ஆரோக்கிய வாழ்வை பெறுவதற்கு யோகாசன முறையை பின்பற்றுவதே தீர்வாகும்.

யோகாவின் ஆற்றல்

நமது உடம்பில் பல முக்கிய குழலற்ற சதைக்கோளங்கள் (கிளாண்ட்ஸ்) உள்ளன. அவற்றிலிருந்து வெளிப்படும் ஹார்மோன்கள் தான் ரத்தத்துடன் கலந்து நோய் கிருமிகளை அழிக்கின்றது. இவை ஒழுங்காக வேலை செய்வதால் நமக்கு நோய்கள் வருவதில்லை. இந்த சுரப்பிகளை நன்கு இயங்க வைக்கக்கூடிய சக்தியை கொடுக்கக் கூடியது யோகாசனம் மட்டுமே.

உச்சி முதல் பாதம் வரை பலன்

தேகப்பயிருச்சி உடலின் வெளிப்பகங்களை மட்டுமே மெருகெற்ற முடியும். ஆனால் உடலின் உச்சி முதல் பாதம் வரை அனைத்து உள்ளுறுப்புகளையும் மெருகேற்றி, பலப்படுத்தி நன்கு ஆரோக்கியமாக இயங்க வைக்க யோகாசனத்தினால் மட்டுமே சாத்தியமாகும். மேலும் உடலின் வெளிபாகங்களையும் கட்டுமஸ்தாக மாற்றுகின்றது. யோகாசனங்கள் செய்வதால் உடலிற்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு மன அமைதியும் உண்டாகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *