கொசுவிற்கு சவால், முடிந்தால் கடித்துப் பார்!

மழைக்காலம் என்றாலே, கொசுக்கள் படையெடுக்கும் காலம்தான்! மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும். எவ்வகை கொசுவாயினும், அவற்றில் பெண் கொசுக்கள் முட்டையிட, ரத்தம் தேவை.

தொடர்ந்து ஒவ்வொரு மனிதராக அது கடிக்கும் போது, ரத்தத்தின் மூலம் பரவும் மலேரியா, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், டெங்கூ, சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகின்றன.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • இயற்கை முறை பாதுகாப்பு வழிமுறைகள்
  • தவிர்க்க வேண்டிய செயற்கை முறைகள்
  • கொசு கடிப்பதற்கான வாய்புகள்

கொசுக் கடியிலிருந்து தப்பித்தல்:

Mosquito Protection Ways

கொசுக்களை நம்மால் அழிக்க முடியவில்லை, அழிக்கவும் முடியாது! ஆனால், அதனிடம் கடிபடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்.

இயற்கை முறை பாதுகாப்பு வழிமுறைகள்:

படுக்கப்போகும் முன் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப் படுத்தல், உடல் வெப்பநிலை குறைந்து கொசுவினால் கண்டுபிடிக்க முடியாமல் போகும்.

தூங்கும் பொழுது, உங்களை சுற்றி கொசு வலைகளை கட்டி தூங்கினால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம், மற்றும் வீட்டு ஜன்னல், கதவுகளில் கொசு வலைகளை அறைந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Mosquito Nets Online Shopping

வெண்மையான உடைகளை அணிந்து, வெளிர் நிறமுள்ள போர்வைகளால் போர்த்திக்கொண்டாலும் கொசு கடிக்காது.

எலுமிச்சையை இரண்டாக நறுக்கி, இருதுண்டுகளிலும்  கிராம்புகளை நெருக்கமாக சொருகி உங்கள் அருகில் வைத்துக்கொண்டால், எலுமிச்சை கிராம்பு வாசனைக்கு கொசுக்கள் அருகில் அண்டாது.

வீட்டினுள், காய்ந்த யூக்கலிப்டஸ் இலைகளை புகை போட்டு வைத்தால், கொசுக்களிடம் இருந்து தப்பிக்க முடியும். வீட்டில் யாரேனும் ஆஸ்துமாவினால் அவதிப்பட்டால், இந்த முறையை தவிர்ப்பது நல்லது.

வீட்டை சுற்றி துளசி செடிகளை நட்டு வளர்த்தால், வீட்டை கொசுக்கள் அண்டாமல் தடுக்க முடியும்.

வேப்பெண்ணை, விளக்கெண்ணை கொண்டு விளக்கு ஏற்றுவதும், சாம்பிராணி போடுவதும் கொசுக்கள் வராமல் தடுக்கிறது.

தவிர்க்க வேண்டிய செயற்கை முறைகள்:

கொசு கடியிலிருந்து தப்பிக்க, உடலில் பூசும் களிம்புகள் உள்ளன. ஆனால், அவற்றை நேரடியாக உடலில் பூசுவதை விட, ஆடைகளில் பூசிக் கொள்வது நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தக் களிம்புகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது.

கொசு வத்திகள், சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை, மூச்சுக் குழலில் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் ஆகியவற்றை உருவாக்கி விடும்.

பூச்சிக்கொல்லி மருந்துக் கெல்லாம் இப்போதைய கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இந்தப் பூச்சிக் கொல்லிகளை, “ஸ்பிரே’ செய்தால், இந்த மருந்தை எதிர்க்கும் சக்தியைக் கொசுக்கள் பெற்று விடும்; மனிதர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.

கொசு கடிப்பதற்கான வாய்புகள்:

அடர் சிவப்பு ஆடையை அணிந்திருக்கும் நபரை, கொசுக்கள் கடிக்க விரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமாக வியர்க்கும் நபரை, கொசு அவர்களை தேடி வந்து கடிக்கும். வியர்வையில் கொசுவைக் கவரும் வேதிப்பொருட்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம்.

உங்கள் உடலில் இருந்து வெளிவரும் வெப்பம் அதிகமாக இருந்தாலும், அது கொசுவைக் கவரும்.

அதிகமாக அசையும் போதும், கொசு கடிக்கும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் உயிருள்ள இரையை கொசுவால் எளிதாக அடையாளம் காண முடியும்.

பளபளப்பான செயற்கை இழைப் போர்வைகளையும் உடைகளையும் தவிர்ப்பது  நல்லது.

எப்பொழுதும், செயற்கை பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவதை விட, இயற்கை வழி பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவதே அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *