உடற்பயிற்சி – 24மணி நேரத்தில் முக்கியமான ஒன்று!

இப்பதிவில், உடற்பயிற்சியின் அவசியம், நன்மைகளை நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.

“அட போப்பா… சாப்பிடகூட டைம் இல்ல, இதுல எங்க EXERCISE பன்றது” என்று சலிப்புடன் சொல்லும் அனைத்து உள்ளங்களுகாக இந்த பதிவு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • உடற்பயிற்சி
  • உடற்பயிற்சியின் பலன்கள்
  • செலவிடும் நேரம்
  • உடற்பயிற்சி செய்யும் முறை
  • உடல் ஆரோக்கியம் உறுதி

உடற்பயிற்சி

Home Exercise tips benefits in tamil

ஆரோக்கியமான வாழ்வு அமைய அஸ்திவாரமாக அமைவது உடற்பயிற்சியே. ஆரோக்கியமாக வாழ்நாட்களை  நீட்டிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சிகள் செய்வதால் கிடைக்கிற பலன் அநேகம் இருந்தாலும் அதில் முக்கியமானது நோயற்ற வாழ்வும், என்றும் இளமையும்.

எலும்புகளே உடலின் ஆதாரம்.  ஆதாரம் உறுதியாக  இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக  இருக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலில் உள்ள அனைத்து எலும்புகளும்  வலுவடைகின்றன.  எலும்புகள் மட்டும் அல்ல அதை  சுற்றி பின்னிப்பிணைக்கும் தசைகளும் வலுப்பெறுகின்றன.

உடற்பயிற்சியின் பலன்கள்

உடற்பயிற்சி செய்யும்போது இதயத்துடிப்பு அதிகமாவதால் அதிக ரத்தம் உந்தப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் நன்றாக கலக்கப்பட்டு உடல் முழுவதும் சீராக பரவுகிறது.  உடற்பயிற்சி செய்கிறபொழுது நம் மூளையிலிருந்து எண்டார்பின் என்கிற ரசாயனம் சுரக்கப்பட்டு  நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கின்றது . மேலும் உடற்பயிற்சி தினசரி தவறாமல் செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சாதாரண தொற்று நோயிலிருந்து,  புற்றுநோய் அபாயம் வரை  நோய்கள் தவிர்க்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செலவிடும் நேரம்

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சிக்கென நேரத்தை செலவிட்டு உணவு முறையை சீர்படுத்துவதன்  மூலம் உடலில்  நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயற்ற  வாழ்க்கையை நாம்  பெறமுடியும்.

உடற்பயிற்சி செய்யும் முறை

உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் உடலினை தயார் படுத்த warmup செய்து  தசைகளை சற்று தளர்த்திக்கொள்வது அவசியம்.

உடற்பயிற்சி முடிக்கும் முன் மெள்ளமெள்ளக் குறைத்து warmup செய்து  முடிக்க வேண்டும்.

உடல் சிரமத்திற்கு  உள்ளாகும் கடுமையான பயிற்சியை செய்தல் கூடாது. உடல் ஒத்துழைக்கும் அளவிற்கான பயிற்சியை மட்டுமே செய்தல் நல்லது.

சரியான உடற்பயிற்சி அணிகலன்களை அணிந்து  செய்வது பாதுகாப்பானது.

உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக தண்ணீர், முளைகட்டிய தானிய வகைகள், பழங்கள்  மற்றும் பழச்சாறு உட்கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியம் உறுதி

புதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்களுக்கு அடுத்த இரண்டு  அல்லது மூன்று நாட்களுக்கு உடல் மற்றும் தசை வலி இருக்கும். அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்லுபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் கிடைப்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *