ஃபேஷன் ஃப்ரூட் – ஓர் சிறப்பு பார்வை!

இப்பதிவில், ஃபேஷன் ஃப்ரூட் எனும் பழத்தினை பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.

பார்ப்பதற்கு அழகாகவும், ருசிபார்க்க ஆவலை தூண்டும் பழங்களில் ஒன்றாக Passion Fruit-ம் ஒன்று. சமீபகாலமாக பழக்கடைகளில் Passion Fruit தனக்கென ஒரு தனி இடம் பிடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது ருசி நிறைந்தது மட்டுமல்லாமல் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகவும் காணப்படுகிறது. இதன் சிறப்புகள் மற்றும் மருத்துவ குணங்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • ஃபேஷன் ஃப்ரூட்
  • பட்டாசு பழம்
  • மருத்துவ குணங்கள்
  • பிற பயன்பாடுகள்

ஃபேஷன் ஃப்ரூட்

Passion fruit health benefits in tamil language

Passion Fruit உருவத்தில் உருண்டையாகவோ அல்லது முட்டை வடிவத்திலோ காணப்படுகிறது. இது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கலந்த நீல நிறமாக காட்சியளிக்கிறது. தோல் பகுதி தடித்தும், உள்ளே உள்ள சதைப் பகுதியானது பச்சை நிறம் கலந்த ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. புளிப்பு கலந்த இனிப்பு சுவை கொண்டுள்ளது.

பழம் பழுக்கப்பழுக்க இதன் தோலின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். பழம் நன்கு பழுத்த உடன் இதன் தோல் பகுதி சுருங்கி காணப்படும். இது தன் வகைக்கு ஏற்ப நிறம் கொண்டிருக்கும். சிவப்பு கலந்த நீலம் அல்லது மஞ்சள் நிறங்களில் இவை மாறுகின்றது.

பட்டாசு பழம்

இப்பழத்தை கையால் சற்று அழுத்தம் கொடுத்து பிடித்தால் ‘டப்’ என பட்டாசு வெடிப்பது போன்ற சத்தத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால் மலைப்பகுதி மக்கள் இப்பழத்தை ‘பட்டாசு பழம்’ என அழைக்கின்றார்கள். ஸ்பானிஷ் மக்கள் ‘சிறிய மாதுளை’ என்றும் இதனை அழைக்கின்றார்கள். இப்பழம் உருகுவே , பிரேசில் மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் தென் இந்திய மற்றும் வங்காள மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.

மருத்துவ குணங்கள்

இப்பழத்தில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்திருக்கின்றன. இதில் பீட்டா-கரோட்டின், வைட்டமின்-சி மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக இருக்கின்றது. ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகம் அடங்கியுள்ளதால் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உதவுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற அல்லது சேதமடைந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது. இதய நோய் மற்றும் புற்றுநோய், நாள்பட்ட வீக்கம் போன்றவற்றுக்கு எதிராக இப்பழம் செயல்படுகிறது.

பீட்டா கரோட்டின் என்பது ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும். இது நம் உடலில் வைட்டமின்-ஏ வாக மாற்றப்பட்டு நமது கண் பார்வையை பாதுகாப்பதற்கு அவசியமானதாக அமைகிறது. வைட்டமின்-சி நம் உணவில் இருந்து பெற வேண்டிய முக்கியமான ஆக்ஸிஜனேற்றமாகும். இது ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கிய வயதுடன் இருக்க உதவுகிறது.

இது ஒரு நல்ல நார்ச்சத்து ஆதாரமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளிட்ட நோய் ஆபத்திலிருந்து குறைக்க உதவுகிறது. இதன் சதைப் பகுதி மிகவும் வாசனை கொண்டுள்ளதால் இதனைப் பிழிந்து சாறு எடுத்து குளிர்பானங்கள் தயாரிக்கின்றனர். இதன் சாறு இதயத்தை பலப்படுத்தும் பானமாக பயன்படுகிறது. வைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ்வகைப் பழங்களை அப்படியே நாம் சாப்பிட முடியும்.

பிற பயன்பாடுகள்

ஐரோப்பிய நாடுகள் இதன் இலைகளைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கின்றன. இப்பழத்திலிருந்து சாலட், ஐஸ்கிரீம், சர்பத், ஜெல்லி மிட்டாய், கற்கண்டு, ஜூஸ் போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இப்பழம் மிகவும் வாசனைத் தன்மை கொண்டுள்ளதால் வாசனை திரவியம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *