மெனிக்யூர் – ஒழிந்திருக்கும் ஆரோக்கிய பலன்கள்!

இப்பதிவில், மெனிக்யூர் செய்வதால் ஏற்படும் பலன்களை நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.

பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் கலைகளில் ஒன்று மெனிக்யூர். மெனிக்யூர் செய்வதால் அழகு மேம்படுவதோடு உடலிற்கு சில நன்மைகளும் ஏற்படுகிறது என்பது அநேகர் அறியாத ஒன்று. மெனிக்யூர் என்பதை பற்றியும் மற்றும் அதனால் உடலிற்கு ஏற்படும் நன்மைகளை பற்றியும் இப்பதிவில் காண்போம்.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • மெனிக்யூர்
  • உடலிற்கு ஏற்படும் நன்மைகள்
  • அக்காலத்து மெனிக்யூர்

மெனிக்யூர்

Manicure health benefits in tamil மெனிக்யூர்

மெனிக்யூர் என்பது கை, விரல், நகம் ஒப்பனைக் கலை ஆகும். முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களை கவரும் பாகம் என்னவென்றால் அது கைகள் மட்டுமே. அதே போல் நமக்கு வயதாகி கொண்டிருக்கின்றது என்பதையும் முகத்திற்கு அடுத்தபடியாக கைகள் எளிதாய் நமக்கு காட்டிக்கொடுக்கும். காரணம், முதுமைக்குள் செல்ல செல்ல தோல்களில் தோன்றும் சுருக்கம் முகத்தில் மட்டுமல்ல கைகளிலும் தெரியத் தொடங்கும். பெண்கள் பெரும்பாலும் தங்கள் முகம், தலைமுடிக்கு அடுத்தபடியாக அழகுப் படுத்திக்கொள்ள விரும்புவது கைகளைத்தான். ஏனெனில் முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களின் பார்வைக்கு வெளிப்புறம் சட்டெனத் தெரிவது கைகளும், விரல்களும் மற்றும் விரல் நகங்களுமே!

மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல, நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது என சொல்ல முடியும். புத்துணர்ச்சி கிடைப்பதன் மூலமாக கை மற்றும் விரல்கள் சுருக்கம் நீங்கிய நிலையில் பார்க்க மிகவும் அழகாக கவர்ச்சியாக வெளிப்படுகிறது.

உடலிற்கு ஏற்படும் நன்மைகள்

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மெனிக்யூர்-ல் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது. மெனிக்யூர் செய்யும்போது உள்ளங் கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் அப்பகுதியில் உள்ள முக்கியமான நரம்புகளின் இணைப்புகள் தூண்டப்படுகின்றன.

உடலில் பல பாகங்களோடு தொடர்பில் உள்ள நரம்புகள் உடனடியாகத் தூண்டப்பட்டு மொத்த உடலுமே புத்துணர்ச்சி பெறுகிறது. உடலுக்கு உடனடி வலி நிவாரணம் கிடைக்கின்றது. நமது மூளை, இதயம், கண்கள், கழுத்து, முதுகுப் பகுதி எல்லாமே புத்துணர்வு அடையும். மேலும் இதில் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் அதிக வாய்ப்புள்ளது.

அக்காலத்து மெனிக்யூர்

அக்காலத்தில் வெளிநாட்டு பெண்களும் மகாராணிகளும் , முகத்தை மட்டுமல்லாமல் கைகள் மற்றும் கால்களையும் சேர்த்து அழகு படுத்துவதில் கவனம் செலுத்தினர். பெரும்பாலும் மன்னர்காலத்து பெண்களிடத்தில் கைகளில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மெனிக்யூர்-பெடிக்யூர் செய்யும் பழக்கவழக்கம் இருந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *