வாஷிங் மெஷின் – நன்மை தீமை அறியுங்கள்!

இப்பதிவில், வாஷிங் மெஷின் நன்மை தீமைகளை நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.

சில வருடங்களுக்கு முன் வசதி படைத்த வீடுகளில் மட்டும் காணப்பட்ட இந்த வாஷிங் மெஷின், இப்பொழுது அனைத்து வீடுகளிலும் ஒரு அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது! இந்த பதிவில் இக்காலத்தில் நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் வாஷிங் மெஷின்-ஆல் நம் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை சற்று பார்ப்போம்.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • வாஷிங் மெஷின்
  • உடற் உழைப்பிலிருந்து ஓய்வு
  • நன்மைகள்
  • தீமைகள்
  • விலை மற்றும் அளவு
  • திட்டமிடல்

வாஷிங் மெஷின்

Washing Machine advantages disadvantages in tamil

தற்காலத்தில் அனேக வீடுகளில் தனக்கென்று ஒரு தனி அறையை தக்க வைத்து கொள்ளும் அளவிற்கு தகுதி வாய்ந்ததாக அமைந்துவிட்டது இந்த வாஷிங் மெஷின்.

சில வருடங்களுக்கு முன் வசதி படைத்த வீடுகளில் மட்டும் காணப்பட்ட இந்த சலவை இயந்திரம், இப்பொழுது அனைத்து வீடுகளிலும் ஒரு அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது.

உடற் உழைப்பிலிருந்து ஓய்வு

நமக்கு முந்தின தலைமுறையினர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததற்கும் வாழ்ந்து வருவதற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கைகளால் ஆடைகளை துவைப்பது. கைகளால் ஆடை துவைக்கும் பொழுது குனித்தல், நிமிர்த்தல், குற்றல் வைத்து உட்காருதல் போன்ற செயல்களால் உடம்பிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் பாய்ந்து உடலிற்கு வலு சேர்கின்றது. அது ஒரு உடற்பயிற்சியாகவே அவர்களுக்கு அமைந்தது. ஆனால் கைகளால் ஆடை துவைத்தலில் ஒரே ஒரு குறைதான் நாம் காண முடியும். நேரம் அதிகமாக எடுத்து கொள்ளும். அந்த நேரத்தை சுருகுவதற்கும், அதிகப்படியான ஆடைகளை எளிதாக துவைப்பதற்கும் கண்டுபுடிக்கப்பட்ட இயந்திரம் வாஷிங் மெஷின்.

நன்மைகள்

இதனால் ஒரு சில தீமைகள் இருந்தாலும், அதனை ஈடுகட்டும் வகையில் அதிக நன்மைகளும் உண்டு.

நேரத்தை மிச்சப்படுத்துதல்:

இந்த சலவை இயந்திரத்தின் மிக பெரிய பயன் நேரத்தை மிச்சப்படுத்தி கொடுக்கின்றது. அதுமட்டும் இல்லாமல், நாம் அருகில் இருந்து கவனிக்க வேண்டிய அவசியம் இருக்காது. துணிகளை அதனுள் கிடத்தி “ஆன்” செய்துவிட்டு, மற்ற வீட்டு வேலைகளை கவனிக்க முடியும். எனவே குடும்ப பெண்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல முடியும்.

வேலை பளு:

கைகளால் துவைக்கும் பொழுது கைகளுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் அளவுக்கு அதிகப்படியான துணிகளை துவைக்கும் பொழுது உடலிற்கு ஏற்படும் அசதி போன்றவற்றை இந்த சலவை இயந்திரம் வெறுமனை ஆக்குகின்றது. அதுமட்டும் இல்லாமல், ஆடைகளில் உள்ள கறைகளை ஒரு சில நொடிகளில் நீக்கி விடுகின்றது.

சலவை சுழற்சி:

துணிகளின் தன்மை மற்றும் கனதிற்கேற்ப சலவை சுழற்சியை இந்த இயந்திரத்தில் மாற்றியமைக்க கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.

தீமைகள்

நன்மைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் தீமைகளும் சற்று இருப்பது போல், இந்த சலவை இயந்திரத்திலும் நாம் ஏற்று கொள்ள முடியாத சில தீமை இருக்கதான் செய்கிறது.

மின்சாரத்தை பயன்படுத்தி இந்த சலவை இயந்திரம் இயங்குவதால், மின்சாரத்தை சற்று அதிகமாக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

கைகளால் துவைக்கும் பொழுது பயன்படுத்தப்படும் சலவை பொடி மற்றும் தண்ணீரின் அளவை விட அதிகப்படியான சலவை பொடி மற்றும் தண்ணீர் தேவைப்படும்.

சலவை இயந்திரத்திற்கென்று தயாரிக்கப்பட்ட சலவை பொடியை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும். கைகளால் துவைக்கும் பொழுது பயன்படுத்தபடும் சலவை பொடியின் விலையைவிட இதன் விலை சற்று அதிகம்.

சலவை இயந்திரத்தை வைப்பதற்கென்று வீட்டினுள் அதற்கென்று ஒரு இடமும் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற வடிகால் வசதியும் தேவைப்படுவதால் சிறிய வீடுகளில் வசிப்பவர்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.

விலை மற்றும் அளவு

ஆரம்ப காலத்தில் இதன் அளவு பெரியதாக இருந்தாலும், தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை அனைத்து அளவுகளிலும் கிடைக்கின்றன.

பிரண்ட் லோட், டாப் லோட், செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என பல வகையான சலவை இயந்திரங்கள் அதனதன் அம்சங்களுக்கு ஏற்ற விலையில் விற்பனையில் உள்ளன. அவரவர் தங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ப சலவை இயந்திரங்களை தேர்வு செய்து வாங்கிக்கொள்ள முடியும்.

திட்டமிடல்

உணவு உண்பதற்கு கூட நேரம் இல்லாத இந்த காலகட்டத்தில், குறிப்பிடப்பட்டுள்ள தீமைகளை விட நன்மைகளே நம் மனதிற்கு பெரியதாக தோன்றுகிறது அல்லவா!

சரியான திட்டம் தீட்டி செயல்படும் பட்சத்தில் இதன் நன்மைகளை முழுமையாக நம் வாழ்நாளில் என்றேன்றும் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *